17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் : கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி

Oct 10 2017 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில், கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இரண்டு தகுதிச்சுற்று போட்டிகளில் தோல்வியடைந்ததால், அடுத்த சுற்று ஆட்டங்களுக்கு இந்தியா தகுதி பெறுவது கேள்விக்குறி ஆகியுள்ளது.

17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில், நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் இந்தியா- கொலம்பியா அணிகள் மோதின. போட்டியின் முதல்பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில், கொலம்பியா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. இதனையடுத்து, 80-வது நிமிடத்தில் இந்திய அணி தனது முதல் கோலை அடித்தது.

சிறிது நேரத்திலேயே கொலம்பியா அணி மற்றொரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனையடுத்து, கோல் அடிக்க இந்தியா எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போனது. ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்றது.

போட்டி தொடக்க நாளான, கடந்த 6-ம் தேதி அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து, அடுத்த சுற்று ஆட்டங்களுக்கு இந்தியா தகுதி பெறுவது கேள்விக்குறி ஆகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00