ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி- முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Oct 12 2017 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பான் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆடவருக்கான 10-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் , ஜப்பான் அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 3-வது நிமிடத்தில் இந்திய வீரர் Sunil முதல் கோல் அடித்தார். அடுத்த சில நிமிடத்தில் ஜப்பான் அணி ஒரு கோல் அடித்தது. இதனைதொடர்ந்து 22-வது நிமிடத்தில் இந்திய வீரர் Lalit Upadhyay 2-வது கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

2-வது பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 33, 35 மற்றும் 48-வது நிமிடத்தில் கோல்கள் அடித்து அசத்தியது. ஆனால் கடைசி வரை போராடியும் ஜப்பான் அணியால் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் 5-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00