ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம் : மெக்ஸிகோவை வென்று காலிறுதிக்கு முன்னேறியது பிரசில் அணி

Jul 3 2018 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகக்‍கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற நாக்-அவுட் சுற்றுப் போட்டிகளில், பெல்ஜியம், பிரஸில் அணிகள் காலிறுதி சுற்றுக்‍கு முன்னேறியுள்ளன.

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்‍ கோப்பை போட்டிகளில் நேற்று நடைபெற்ற நாக்‍ அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில், பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் தொடக்‍கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்காததால், பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார். மேலும், ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் டகாஷி மேலும் ஒரு கோல் அடித்ததால், ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து, 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் சமனிலை பெற்றதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

முன்னதாக நேற்று நடைபெற்ற நாக்-அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில், மெக்சிகோ - பிரஸில் அணிகள் மோதின. நட்சத்திர வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரஸில் அணி மீது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனை அடுத்து, இரண்டாம் பாதியின் 51-வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலாக கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து, 90 வது நிமிடத்தில் பிரேஸில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் பிரஸில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00