உலகக்‍ கோப்பை கிரிக்கெட் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் அணிக்‍கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி

Jun 18 2019 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகக்‍ கோப்பை கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்‍கு எதிரான ஆட்டத்தில், பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. உலகக்கோப்பை தொடரின் 23-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. இதில், வெஸ்ட் இண்டீஸ் - பங்களாதேஷ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 321 ரன் எடுத்தது. Shai Hope 96 ரன்னும், Evin Lewis 70 ரன்களும் குவித்தனர். பங்களாதேஷ் சார்பில், Mohammad Saifuddin, Mustafizur Rahman ஆகியோர் தலா 3 விக்‍கெட்டுகளை வீழ்த்தினர். 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்‍கம் முதலே அதிரடியாக விளையாடிய அந்த அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதில் சிறப்பாக விளையாடிய ஷகிப்-அல்-ஹசன் - லிட்டன் தாஸ் ஜோடி, வெஸ்ட் இண்டிஸ் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து. இதனால் பங்களாதேஷ் அணி, 3 விக்‍கெட்டுகளை மட்டுமே இழந்து 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிரடியாக விளையாடிய ஷகிப்-அல்-ஹசன் 124 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 94 ரன்களுடன் ஆட்டமிழக்‍காமல் களத்தில் இருந்தனர். இன்று பிற்பகல் 3.00 மணி அளவில் Manchester நகரில் நடைபெறும் 24 லீக்‍ போட்டியில், இங்கிலாந்து - அஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00