ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் லீக்‍ ஆட்டம் - இங்கிலாந்து அணி பரிதாப தோல்வி

Jun 26 2019 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக கோப்பை கிரிக்‍கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 32-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் ஆரோன் ஃபின்ஞ்ச் 100 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக Woakes 2 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேம்ஸ் வீன்சி முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் வந்த ஜோ ரூட் 8 ரன்களிலும், இயன் மோர்கன் 4 ரன்களிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பென் ஸ்டோக்ஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி 89 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்‍கவே 221 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து, 64 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் மெஹ்ரண்டப் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த​தோடு, அரைஇறுதிக்கும் முன்னேறியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00