கோபா அமெரிக்‍கா கால்பந்து தொடர் - இறுதிபோட்டியில் பெரு அணியை தோற்கடித்து, மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது பிரசில்

Jul 8 2019 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோபா அமெரிக்‍கா கால்பந்து தொடரின் இறுதிபோட்டியில் பெரு அணியை தோற்கடித்து, பிரசில் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.

கோபா அமெரிக்‍கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்றது. Rio de Janeiro நகரின் Maracana மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், பெரு அணியை, பிரேசில் எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே பிரசில் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் அந்த அணியின் Everton Soares முதல் கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதிலடியாக பெரு வீரர் Paolo Guerrero கோல் அடித்து தனது அணியை சமநிலைப்படுத்தினார். எனினும், 45-வது நிமிடத்தில் பிரசிலின் Gabriel Jesus, தனக்‍கு கிடைத்த அரிய வாய்ப்பை, லாவகமாக பயன்படுத்தி அற்புதமாக கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் பிரசில் அணி 2-க்‍கு பூஜ்ஜியம் என்ற கணக்‍கில் முன்னிலை பெற்றது.

மறுபாதி ஆட்டத்திலும் ஆதிக்‍கம் செலுத்திய பிரசில், மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இறுதியில் 3-க்‍கு ஒன்று என்ற கோல் கணக்‍கில் பிரசில் அணி வெற்றி பெற்று, மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00