இங்கிலாந்துக்‍கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Aug 6 2019 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்துக்‍கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், முதலாவது போட்டி கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்மித் 144 ரன்கள் குவித்தார். பிராட் 5 விக்‍கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, 374 ரன்கள் எடுத்தது. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா, 7 விக்‍கெட் இழப்புக்‍கு 487 ரன்களை குவித்து டிக்‍ளேர் செய்தது. 398 ரன்கள் என்ற கடின இலக்‍குடன் 5-ம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 146 ரன்களுக்‍கு அனைத்து விக்‍கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 251 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00