பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா அபாரம் - 5 தங்கப் பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம்

Sep 3 2019 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களுடன் இந்திய அணி முதலிடம் பெற்றது.

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வந்தது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் வெற்றிபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில், முதல் தங்கத்தை வென்றார். இறுதி நாளாக நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் அபூர்வி சன்டிலா, தீபக் குமார் இணை தங்கப்பதக்கத்தையும், அஞ்சும் மவுட்கில், திவ்யான்ஸ் சிங் இணை வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

இதேபோல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் Manu Bhaker, Chaudhary saurabh இணை தங்கப்பதக்கத்தையும், Yashaswini Singh Deswal, Abhishek Verma, இணை வெள்ளி பதக்கத்தையும் வென்றது. நேற்று ஒரு நாளில் மட்டும் இந்திய அணி 4 பதக்கங்களை கைப்பற்றியது. இதன்மூலம், 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00