வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது

Sep 3 2019 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் குவித்திருந்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் 2வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, 168 ரன்கள் எடுத்தபோது டிக்‍ளேர் செய்தது. 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாவது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

4ம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய வீரர் பும்ரா வீசிய பந்து பிராவோவின் ஹெல்மெட்டில் தாக்கியதை தொடர்ந்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் அவர் வெளியேறினார். ரோஸ்டன் சேஸ், ஹெட்மெயர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. பிளாக்வுட் மற்றும் ப்ரூக்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்ததை தொடர்ந்து அந்த அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது. இறுதியில், 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது. இதையடுத்து 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2க்கு பூஜியம் என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00