டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல் : ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் பிடித்தார்

Sep 4 2019 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை, ஐசிசி, நேற்று வெளியிட்டது. இதில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். இந்தியக் கேப்டன் விராட் கோலி 903 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 878 புள்ளிகளுடன் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், மூன்றாவது இடத்தில் உள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 1 ஆண்டுக்கு மேல் தடைசெய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், தற்பொழுது அணியில் இடம்பிடித்து ஒரு சில போட்டிகளிலேயே கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 835 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென்னாப்ரிக்காவின் காகிசோ ரபாடா 851 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் முதலிடத்திலும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 2ஆவது இடத்திலும், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 4ஆவது இடத்தில் உள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00