கரீபியன் பிரீமியர் தொடரில் பங்கேற்றதால் சர்ச்சை : தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கு பி.சி.சி.ஐ. நோட்டீஸ்

Sep 7 2019 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்ற தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தியிடம் விளக்கம் கேட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான, கரீபியன் பிரீமியர் லீக் போட்டியின் தொடக்க விழா, அண்மையில் நடைபெற்றது. இதில், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் ஓய்வறையில், அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்குல்லமுடன், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படங்கள் சமூக வ‌லைதளங்களில் வேகமாக பரவின. மேலும், அந்த புகைப்படத்தில், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்சியையும் தினேஷ் கார்த்திக் அணிந்திருந்தார்.

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள், வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க தடை உள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் அங்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில், தினேஷ் கார்த்தியிடம் விளக்கம் கேட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும், அனுமதியின்றி அங்கு சென்றதால், உங்கள் ஒப்பந்தத்தை ஏன் ரத்துச் செய்யக்கூடாது என்றும் அதில் கேட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக, தினேஷ் கார்த்திக் இருக்கிறார். இந்த அணியின் உரிமையாளர், திரு. ஷாரூக் கான், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00