தென்னாப்பிரிக்‍காவுக்‍கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்‍கெட் - இந்திய வீரர் மயாங்க் அகர்வால் இரட்டை சதம்

Oct 3 2019 8:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்னாப்பிரிக்‍காவுக்‍கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் தனது முதல் இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா, 115 ரன்களுடனும், மயாங்க் அகர்வால், 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று, இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. பொறுப்புடன் விளையாடிய தொடக்க வீரர்கள், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா, 176 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் நிதானமாக விளையாடிய மயா‍ங்க் அகர்வால், தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்து, முதல் சதத்தை பதிவு செய்தார். பின் அதிரடியாக விளையாடிய இவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதில், 22 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். 215 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார்.

தேநீர் இடைவேளையில், 450 ரன்களுக்கு 5 விக்கெட்டுக‌ளை இழந்து வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது. ஜடேஜா, ஹனுமா விகாரி களத்தில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00