டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தும் விராட் கோலி - இரட்டை சத சாதனையில் சச்சின், ஷேவாக்கை மிஞ்சினார்

Oct 12 2019 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரன் மெஷின் என்று வர்ணிக்கப்படும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இரட்டைச் சதமடித்து, சச்சின் மற்றும் சேவாக் சாதனைகளை முறியடித்தார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட், புனேவில், கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் இருந்த விராட் கோலி யும், ரகானேவும், இரண்டாம் நாளில், ஆட்டத்தை தொடர்ந்தனர். நிதானமாக விளையாடிய கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26-ஆவது சதத்தை பதிவு செய்தார். சதத்திற்கு பின்னரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7-ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம், 7 முறை, இரட்டைச் சதம் அடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றதுடன், முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் ஆகியோரின் சாதனைகளையும், கோலி, முறியடித்தார்.

டெஸ்ட் போட்டிகளில், இதற்பு முன்பு, சச்சின் மற்றும் சேவாக் இருவரும், தலா 6 இரட்டைச் சதங்கள் விளாசியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6 இரட்டைச் சதங்களும், சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 இரட்டைச் சதங்களும் அடித்துள்ளனர். ராகுல் டிராவிட் 5 முறையும், சுனில் கவாஸ்கர் 4 முறையும், புஜாரா 3 முறையும், இந்திய அணிக்காக இரட்டைச் சதமடித்துள்ளனர்.

ஆனால் விராட் கோலி, தனது 81-ஆவது டெஸ்ட் போட்டியிலேயே, சச்சின் மற்றும் சேவாக் சாதனையை முறியடித்தார். கோலி அடித்த 7 இரட்டைச் சதங்களும், கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் அடிக்கப்பட்டவை என்பது மற்றொரு சிறப்பு.

உலக அளவில், ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேன், 12 முறை இரட்டைச் சதமடித்து முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00