தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 4 சிக்சர்கள் அடித்து சதத்தை கடந்த ரோகித் சர்மா - 2 நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்து புதிய உலக சாதனை

Oct 20 2019 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 4 சிக்சர்கள் அடித்ததன் மூலம், இரண்டு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், அதிக சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை, தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா புரிந்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான, மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 58 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு, 224 ரன்கள் எடுத்த போது, போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக, முதல் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, 6-வது சதத்தை பதிவு செய்தார். இதில், 14 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம், இரண்டு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரன் ஹெட்மயரை பின்னுக்குத் தள்ளி, ரோகித் சர்மா முதலிடம் பிடித்தார்.

துணைக் கே‌ப்டன் ரஹானே, 83 ரன்களுடனும், ரோகித் சர்மா, 117 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு, இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00