குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை : வெள்ளி பதக்கம் வென்ற மஞ்சுராணிக்கு ரூ.14 லட்சம் பரிசு

Oct 20 2019 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டியில், வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மஞ்சுராணிக்கு, விளையாட்டுத் துறை சார்பில் 14 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டி, அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கம் வென்றார். மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகள், டெல்லியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்தனர்.

அப்போது, வெள்ளிப்பதக்கம் வென்ற மஞ்சு ராணிக்கு 14 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் ரிஜிஜு வழங்கினார். வெண்கலம் வென்ற மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோருக்கு தலா 8 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிஜிஜு, பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில், 4 வீராங்கனைகள் பதக்கம் வெற்றிருப்பது, இந்திய குத்துச்சண்டை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த சாதனை என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00