தென்னாப்ரிக்‍க அணியை கிரிக்‍கெட் தொடரில் வொயிட் வாஷ் செய்தது இந்தியா - ராஞ்சியில் நடைபெற்ற 3வது போட்டியிலும் வெற்றிபெற்று அபாரம்

Oct 22 2019 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 3க்‍கு பூஜ்ஜியம் என்ற கணக்‍கில் இந்தியா தொடரை முழுமையாக வென்றது.

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் க‌டைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில், ரோகித் சர்மாவின் அதிரடி இரட்டை சதத்தால், இந்திய அணி, 497 ரன்களுக்‍கு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்சில், 162 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி, பாலோ ஆன் ஆனதால், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.

இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இரண்டாவது இன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவிடம் சரண‌டைந்தது. 8 விக்‍கெட்டுக்‍கு 132 ரன்கள் என்ற ஸ்கோருடன் இன்று காலை தென்னாப்பிரிக்‍கா தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடியது. மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில், அந்த அணி எஞ்சிய 2 விக்‍கெட்டுகளையும் இழந்ததால், 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், ஷமி 3 விக்கெட்டுகளும், உமேஷ், நதீம் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3க்‍கு பூஜ்ஜியம் என்ற கணக்‍கில் தொடரையும் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00