இசைஞானி இளையராஜாவின் நாடாளுமன்றப் பணி அனைவரும் பெருமை கொள்ளத்தக்க வகையில் அமையட்டும் - டிடிவி தினகரன் வாழ்த்து
Jul 7 2022 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இசைஞானி இளையராஜாவின் நாடாளுமன்றப் பணி அனைவரும் பெருமை கொள்ளத்தக்க வகையில் அமையட்டும் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி 'பத்ம விபூஷன்' திரு.இளையராஜாவுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ச் சமூகத்தின் போற்றத்தக்க ஆளுமைகளில் ஒருவரான திரு.இளையராஜாவின் நாடாளுமன்றப் பணி, அனைவரும் பெருமை கொள்ளத்தக்க வகையில் அமையட்டும் என வாழ்த்து செய்தியில் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.