கோவையில் கார் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் - வழக்கு தொடர்பாக திருச்சி இனாம்குளத்தூரில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன், லேப்டாப் பறிமுதல்
Nov 28 2022 10:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, திருச்சி போலீசார் இனாம் குளத்தூரில் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் கடந்த மாதம் 23ம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழக உளவுத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் அளித்த பட்டியல் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 19ம் தேதி இனாம்குளத்தூரில் சர்புதீன், சாகுல் ஹமீது ஆகியோரின் வீடுகளில் திருச்சி போலீசார் சோதனை நடத்திய நிலையில், 3வது நபராக சகுபர் அலி என்பவரின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 3 மணி நேர சோதனைக்குப் பின், அவரது செல்ஃபோன், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.