4 முக்கிய துறைகளை தவிர, மற்ற துறைகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோதி திட்டவட்டம்

Feb 25 2021 10:30AM
எழுத்தின் அளவு: அ + அ -
4 முக்கிய துறைகளை தவிர, மற்ற துறைகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவோம் என்று பிரதமர் திரு. மோதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் திரு. மோதி நேற்று இணையவழியில் பேசினார். வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல என்பதால், பொதுத்துறை நிறுவனங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். நிறைய பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், நலிந்த நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் அளிப்பதால், பொருளாதாரத்தின் மீது சுமை கூடுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 4 துறைகளை சேர்ந்த குறைந்தபட்ச பொதுத்துறை நிறுவனங்களை தவிர, மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத சொத்துக்களை விற்று அதன் மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00