டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை தடுக்கும் ஆராய்ச்சியில் முன்னேற்றம் - புதிய பெண் கொசுக்களை கண்டுபிடித்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவிப்பு

Jul 7 2022 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் புதிய பெண் கொசுக்களை கண்டுபிடித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவலைத் தடுக்க பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், டெங்கு, சிக்குன்குனியாவை தடுக்‍கும் வகையில் புதிய பெண் கொசுக்களை தயார் செய்துள்ளதாக புதுவையை சேர்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக விஞ்ஞானி திரு.அஷ்வனி குமார் தெரிவித்துள்ளார். புதுவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்போது உருவாக்‍கப்பட்டுள்ள wolbachia எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை பெண் கொசுவுடன் ஆண் கொசுக்கள் இனப் பெருக்கத்திற்கு விடப்படும் என்றும், இதன்மூலம் வைரஸ் இல்லாத கொசுக்கள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புதிய கொசுக்களை பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00