டெல்லியில் இளம்பெண் ஷர்த்தா படுகொலை போல் மீண்டும் ஒரு பயங்கரம்.... கணவனை மகனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற மனைவி கைது

Nov 28 2022 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

இளம்பெண் ஷ்ரத்தாவை போல் மகனுடன் சேர்ந்து கணவனை 22 துண்டுகளாக வெட்டி கொலை செய்த மனைவியை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் ரோந்து பணிக்கு சென்ற போலீசார் பிண வாடை வீசுவதை அறிந்து அருகில் உள்ள பாண்டவ் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த பாண்டவ் நகர் குற்றப்பிரிவு போலீசார் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் ஒருவரின் உடல் பாகங்களை கண்டு அதிர்ந்து போனார்கள்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் கேரி பேகில் ஏதோ ஒன்றை எடுத்து செல்வதும், அந்த இளைஞனின் பின்னால் பெண் ஒருவர் செல்வதையும் கண்டு விறுவிறுப்படைந்தனர்.

தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போலீசார் பெண்மணி ஒருவரையும் அவரது மகனையும் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் ராம்லீலா மைதானத்தில் கிடைத்த உடல் பாகங்கள் அஞ்சன் தாஸ் என்பவருடையது என்றும், அவர் கைதான பெண்ணின் கணவர் என்பதும் தெரியவந்தது...பாண்டவ் நகரில் பூனம், கணவர் அஞ்சன் தாஸ், மகன் தீபக் வசித்துவரும் நிலையில் அஞ்சன் தாஸ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக பூணம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பல திருமணங்களை செய்துள்ள பூணம், கணவரின் செயலால் ஆத்திரமடைந்து மகனுடன் சேர்ந்து அஞ்சன் தாஸை கொல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த ஜூன் மாதம் அஞ்சன் தாசுக்கு மதுவில் தூக்க மருந்தை கலந்து கொடுத்து குடிக்கவைத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அஞ்சன் தாஸ் மயங்கி சரிய அவரை கொலை செய்து உடலை 22 துண்டு துண்டாக வெட்டி வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைத்துள்ளனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாண்டவ் நகரின் பல பகுதியில் வீசியதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். பூணம் சொன்ன கதையை கேட்டு டெல்லி போலீசார் ஒரு கணம் ஆடிப்போனதுடன், இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஷ்ரத்தாவின் கொலை சம்பவ அதிர்ச்சியில் இருந்து மீளாத டெல்லி வாசிகளை அஞ்சன் தாசின் கொலை மீண்டும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00