கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டம் : ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

Jan 11 2019 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில், சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கக்‍கோரி தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கத் தலைவர் திரு.அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பாம்பு கறி உண்ட விவசாயி மரணம் அடைந்தது போலவும், அதற்கு மேளம் அடித்து பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதும் போராட்டத்தில் பங்கேற்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் திரு.சோழன் சம்சுதீன், விவசாயிகளுக்கு உடனடியாக கரும்பு நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் முதியோர் உதவித்தொகை வழங்கக்‍கோரி கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கீழக்கோட்டையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதியோர் மற்றும் விதவை உதவி தொகை கேட்டு விண்ணபித்துள்ளனர். இதற்காக இவர்கள் அரசு அலுவலர்களுக்கு பணமும் கொடுத்து ஏமாந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட முதியோர் மற்றும் விதவை உதவி தொகை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் அருகில் உள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் பால் நிறுவன பணிகளை நிறுத்தி வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் ஊதியூர் மலை மீது உள்ள வேலாயுதசுவாமி கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்த வந்தனர். இந்து முன்னணியினரைக்‍ கண்டித்து அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களை தடுத்த பொதுமக்களை கண்டித்து இந்து முன்னணியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் - இந்து முண்ணணியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்‍கோரி, புதுச்சேரியில் அரசு வடி சாராய ஆலை ஊழியர்கள், ஆலை நுழைவாயிலுக்கு பூட்டு போட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சாராயக் கடைகளுக்கு வினியோகிக்கும் 40 ஆயிரம் லிட்டர் சாராயம் விநியோகிக்கப்படவில்லை. அரசு தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3072.00 Rs. 3286.00
மும்பை Rs. 3096.00 Rs. 3278.00
டெல்லி Rs. 3108.00 Rs. 3292.00
கொல்கத்தா Rs. 3108.00 Rs. 3289.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.60 Rs. 42600.00
மும்பை Rs. 42.60 Rs. 42600.00
டெல்லி Rs. 42.60 Rs. 42600.00
கொல்கத்தா Rs. 42.60 Rs. 42600.00