கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Jan 11 2019 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்பேரில் செயல்படும், கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரனின் ஆணைக்‍கிணங்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கழக வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாநகர் மாவட்டம் பொன்மலை பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2-ம் கட்டமாக கழக உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளர்கள் சாருபாலா தொண்டைமான், மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் என நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற அலுவலகத்தில், கடலூர் கிழக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. கலைச்செல்வன் முன்னிலையில், பாம.க, அ.தி.மு.க. மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், அக்கட்சிகளிலிருந்து இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். பண்ருட்டி கழக நகர செயலாளர் பூக்கடை சக்திவேல், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் சோழன் சம்சுதீன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கரூர் சட்டமன்ற தொகுதிக்கான ஆலோசனைக்‍ கூட்டம் அவைத் தலைவர் திரு. சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. செயல்வீரர் வீராங்கனைகளுக்கு பூத் கமிட்டி மற்றும் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்கைக்கான ஆலோசனயை மாவட்ட கழக செயலாளர் திரு. பி.எஸ்.எம். தங்கவேல் வழங்கினார். எடப்பாடி அரசின் மக்கள் விரோத போக்கை பொதுமக்களிடம் வீடு, வீடாக எடுத்து கூறுவது - புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00