தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படுவது நிறுத்தம் : பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

Jan 11 2019 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நியாய விலைக்‍ கடைகளில், பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதால் பொதுமக்‍கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரேஷன் கடைகளில், காலை முதலே பொதுமக்‍கள் வெயிலில் காத்து கிடந்தனர். பொங்கல் பரிசு கிடைக்காது என்ற செய்தி பரவியதால், பொதுமக்‍களிடையே அதிருப்தி நிலவியது. பொங்கல் பரிசு வழங்குவதற்கு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால், ரேஷன் அங்காடிகளுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கூலி வேலைக்‍கு செல்பவர்கள் பெரும் அவதிக்‍கு ஆளாகினர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விநாயகபுரத்தில், பொங்கல் பரிசை வாங்க நியாய விலைக் கடையின் முன்பு கூட்டம் அலைமோதியது. இக்கடையின் ஊழியர், பொதுமக்களுக்கு தெரியாமல் அவர்களின் கையெழுத்திட்டு, பணத்தை கொள்ளை அடிப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் கடை ஊழியரைக் கண்டித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நியாய விலைக்‍ கடைகளில், பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதால், மதுரை ரோடு, பேரையூர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ரேசன் கடை பகுதிகளில் பொதுமக்‍கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு வந்த உசிலம்பட்டி வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணனை பொதுமக்‍கள் முற்றுகையிட்டதை அடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில், தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் வழங்கப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பணம் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்‍கள் மறியலில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00