அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் மேலும் 11 பேர் சேர்ப்பு - வழக்கை சுமூகமாக முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Jan 11 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், விழாக்குழுவில் மேலும் 11 பேரை சேர்க்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதித்துள்ளது. இந்த வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விழாக்குழுவில் ஒரே தரப்பைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருப்பதால் மேலும் சிலரை புதிதாக சேர்க்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக, விழாக் குழுவினருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விழாக்குழுவில் ஏற்கெனவே 25 பேர் இருக்கும் நிலையில், மேலும் 11 பேரை புதிதாக சேர்க்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00