தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் - பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம் - திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Jan 18 2019 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழாவை, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் மற்றும் பொதுமக்‍கள் உற்சாகமாகக்‍ கொண்டாடி வருகின்றனர். திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கர்நாடக மாநில அம்மா மக்‍கள் முன்னேற்றக் கழகம் சார்பில், பெங்களூர் ஸ்ரீராம் நகரிலுள்ள எம்ஜிஆர் சிலைக்‍கு, கர்நாடக மாநில செயலாளர் திரு. வா. புகழேந்தி தலைமையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஆயிரம் பேருக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் திரு. ஜெயபால், அம்மா பேரவை செயலாளர் தர்பாரண்யம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய கழகம் சார்பில், திருவாளப்புத்தூர், பட்டவர்த்தி, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், எம்ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு கழக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட கழக வெம்பக்கோட்டை ஒன்றிய கழகம் சார்பில், ஆலங்குளத்தில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எதிர்கோட்டை திரு. S.G. சுப்பிரமணியன் தலைமையில், எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விருதுநகர் மேற்கு மாவட்ட கழக சாத்தூர் நகர ஒன்றிய கழகம், ராஜபாளையம் நகர ஒன்றிய கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர ஒன்றிய கழகங்கள் சார்பில், விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகம் திருச்சுழி வடக்கு ஒன்றிய கழகங்கள் சார்பில், அந்தந்த இடங்களில் அமைக்‍கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப் படங்களுக்‍கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில், குன்றத்தூர் சிவன் கோவில் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.​ இந்நிகழ்ச்சியின்போது, கொளப்பாக்கம் ஊராட்சி திமுகவைச் சேர்ந்த 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தில் இணைந்தனர். பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாஜித் முகமது மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜி,ரோஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழகம் சார்பில், உள்ளகரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கரிகாலன், வட்டக் கழக செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்டகழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கழகம் சார்பில், ஈஞ்சம்பாக்கத்தில், எம்ஜிஆர் திருவுருவப்படத்துக்‍கு, சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் குணசேகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, புத்தகம், கலர் பென்சில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் உமாதேவி, வட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00