உடுமலை அருகே முகாமிட்டிருந்த யானை சின்னத்தம்பி திண்டுக்‍கல் எல்லைக்‍குள் புகுந்தது : வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

Feb 8 2019 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூரை அடுத்த உடுமலை அருகே முகாமிட்டிருந்த யானை சின்னத்தம்பி, திண்டுக்‍கல் மாவட்ட எல்லைக்‍குள் புகுந்துள்ளது.

உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் கடந்த 7 தினங்களாக யானை சின்னத்தம்பி முகாமிட்டிருந்தது. செங்கழனிபுதூரில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்த சின்னத்தம்பி, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, சேதம் அடைந்த பயிர்களுக்‍கு இழப்பீடு வழங்க கோரினர். சின்னத்தம்பி வலம் வந்த பகுதியில் கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் திரு.வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனிடையே, மடத்துக்குளம், அமராவதி நதிக்கரையை கடந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திற்கு உட்பட்ட சுவாமிநாதபுரம் அருகே மேட்டுப்பட்டி வனப்பகுதிக்கு சின்னதம்பி வந்துள்ளது. இந்த யானை மீண்டும் பின்னோக்கிச் சென்றால் அமராவதி வனப்பகுதிக்கோ அல்லது முன்னோக்கி வலப்புறம் இடம்பெயர்ந்தால் கேரள வனப்பகுதிக்கோ செல்ல வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னத்தம்பி இடப்புறமாக இடம்பெயரும் பட்சத்தில், பழனி மற்றும் கொடைக்கானல் வனப்பகுதிக்குள் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00