இசையினால் அனைவரின் மனதையும் குளிர வைக்க முடியும் : இசை நம் அனைவரையும் மகிழ்விக்கும் - இளையராஜா
Feb 11 2019 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இசையினால் அனைவரின் மனத்தையும், இதயத்தையும், உயிரையும் குளிர வைக்க முடியும் என்றும், எப்போதாவது பூக்கும் பூவைப் போல இசையும் நம்மை அனைவரையும் மகிழ்விக்கும் என்றும் திரு. இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் திரு. இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. பிரபல பிண்ணனிப் பாடகர்கள், பிண்ணனிப் பாடகிகள் மற்றும் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு இளையராஜாவின் பாடல்களைப் பாடி பொதுமக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.
நிகழ்ச்சியின்போது பேசிய திரு. இளையராஜா, இசை அனைவரையும் விட்டு விடாமல் தொடர்ந்து உயிருடன் வாழ வைக்கும் வல்லமை கொண்டது என்றும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பாடல்களைப் பாடி மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.