கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் : வடமாநிலங்களை விட தென் மாநிலங்களில் பெண்களுக்கு மரியாதை

Mar 13 2019 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வந்துள்ள திரு.ராகுல்காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஊழல் பற்றி பேசிய திரு.ராகுல்காந்தி ராபர்ட் வதேரா மீதான புகார் குறித்து பேசாதது ஏன் என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று, காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது. ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரி மைதானத்தில், இன்று மாலை, 4 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி கலந்துகொள்கிறார். இதற்காக சென்னை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு.ராகுல்காந்தி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பரதம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத்தொ‌டர்ந்து மாணவிகளுடன் திரு.ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது மாணவிகளிடம், அவர் கடினமான கேள்விகளை கேட்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், ராகுல் என்று அழைக்‍குமாறு மாணவிகளுக்‍கு அன்புடன் கோரிக்‍கை விடுத்தார். அதைத்தொடர்ந்து பேசிய அவர், வடமாநிலங்களை விட தென் மாநிலங்கள் பெண்களை நன்மதிப்புடன் நடத்துவதாகவும், பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

விஜய்மல்லையா, நிரவ்மோடி உள்ளிட்டோரின் ஊழல்களைப் பற்றி பேசி வரும் திரு.ராகுல்காந்தி, ராபர்ட் வதேரா மீதான புகார் குறித்து பேசாதது ஏன் என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். ரபேல் விவகாரத்தில் பிரதமரே தலையிட்டு அம்பானி நிறுவனத்திற்கு உதவியுள்ளதால் தான், அது குறித்து பேசி வருவதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00