பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்

Mar 14 2019 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், புதுக்கோட்டையில் மாதர் சங்கத்தினர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை பொள்ளாச்சி பாலியல் சம்பவம் காட்டுவதாக பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழியில் இளைஞர் சங்கம் மற்றும் முற்போக்கு அரசியல் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளைக்‍ காப்பாற்ற முயலும் அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன முழக்‍கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி புதுச்சேரியில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசும், காவல்துறையும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00