மக்களை ஏமாற்றுவதற்காக எடப்பாடி, பா.ஜ.க., பாமக., சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளது - தேர்தலில் பாஜக, எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என டிடிவி.தினகரன் உறுதி

Apr 16 2019 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்துக்‍கள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவப் பெருமக்‍கள் அனைவரும் ஒற்றுமையோடும், மதநல்லிணக்‍கத்தோடும் வாழவும், சிறுபான்மை மக்‍களுக்‍கு உரிய பாதுகாப்பு கிடைக்‍கவும், மத்தியில் பாரதிய ஜனதாவை மீண்டும் ஆட்சிக்‍கு வரவிடாமல் தடுக்‍க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் நேற்று, பொதுமக்‍களைச் சந்தித்து, வெற்றிச் சின்னமான பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு​பேராதரவு திரட்டினார்.

ஆம்பூர் வருகை தந்த அவருக்கு, பல்லாயிரக்‍கணக்கான மக்‍கள் திரண்டு, வாழ்த்து முழக்‍கங்களுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் திரு. K. பாண்டுரங்கன், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் திரு. ஆர். பாலசுப்பிரமணி ஆகியோருக்‍கு ஆதரவாக, பொதுமக்‍களிடையே எழுச்சியுரையாற்றி, வெற்றிச் சின்னமான பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு திரு.டிடிவி தினகரன் வாக்‍கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திரு. டிடிவி தினகரன், சேலம்-சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தைக்‍ கொண்டு வந்த மத்திய பாரதிய ஜனதா அரசுக்‍கும், எடப்பாடி பழனிசாமி அரசுக்‍கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்னர், ஜோலார்பேட்டை மற்றும், திருப்பத்தூரில் எழுச்சியுரையாற்றிய திரு. டிடிவி தினகரன், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் திரு. A. ஞானசேகருக்‍கு, பரிசுப் பெட்டகம் சின்னத்தில் வாக்‍கு சேகரித்தார்.

இதனையடுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பத்தூர் நகரக்‍ கழகச் செயலாளருமான திரு. ஏ.கே.சி. சுந்தரவடிவேலு, அவரது மனைவி திருமதி. விஜயலட்சுமி ஆகியோர், அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர்களின் இல்லத்திற்குச் சென்று, உருவப்படங்களுக்‍கு, மலர்தூவி திரு.டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்‍கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை நாடாளுமன்றம் தொகுதி கழக வேட்பாளர் திரு.A. ஞானசேகரை ஆதரித்து செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் பொதுமக்‍கள் சந்தித்து, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு திரு.டிடிவி தினகரன் வாக்‍கு சேகரித்தார். கலசப்பாக்‍கம் பகுதியில் பேசிய திரு. டிடிவி தினகரன், தி.மு.க., 2G ஊழலைத் தவிர, மக்களுக்காக எதுவும் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

ஆரணி நாடாளுமன்றம் தொகுதி கழக வேட்பாளர் திரு. செந்தமிழனை ஆதரித்து போளூர் பகுதியில் திரு. டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்‍களிடையே உரையாற்றியபோது, ஆளும் தரப்பை மானம்கெட்டவர்கள் என கூறிய அன்புமணி வார்த்தைபடி, ஈபிஎஸ்-ஓ.பி.எஸ், பாஜக, பாமக கூட்டணி, ஒரு மானங்கெட்ட கூட்டணி என விமர்சனம் செய்தார். மாண்புமிகு அம்மாவுக்‍கு நினைவு மண்டபம் அமைக்ககூடாது, அம்மா படம் வைக்க கூடாது என கூறியவர்களுடன் எடப்பாடி தரப்பினர் கூட்டணி வைத்துள்ளனர் எனவும் குற்றம்சாட்டினார்.

ஆரணி நாடாளுமன்றம் தொகுதி கழக வேட்பாளர் திரு. செந்தமிழனை ஆதரித்து சேத்துபட்டு பகுதியில் திரு. டிடிவி தினகரன், பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசுகையில், இந்த தேர்தலுடன் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றும், மக்களை ஏமாற்றவே எடப்பாடி - பா.ஜ.க. சந்தர்ப்பாவாத கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

கழக வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து, ஆரணியில் திரு. டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது உரையாற்றிய அவர், எடப்பாடி, ஓ.பி.எஸ். போன்ற துரோகிகளுக்கு இந்த தேர்தலில் முடிவு கட்ட வேண்டும் என்றும், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவந்தது திமுகதான் என்றும் கூறினார்.

ஆரணி நாடாளுமன்றம் தொகுதி கழக வேட்பாளர் திரு. செந்தமிழனுக்‍கு, வந்தவாசி பகுதியில் ஆதரித்து பேசுவதற்க்கு நேரம் கடந்து விட்டதால், அங்கு கூடியிருந்த பொதுமக்‍களிடையே திரு. டிடிவி தினகரன் கை அசைத்தபடி சென்றார். இதேபோல், செய்யாறு பகுதியிலும், வெண்பாக்கம் பகுதியிலும் திரண்டிருந்த பொதுமக்‍களிடையே பேசுவதற்க்கு நேரம் கடந்துவிட்டதால் டிடிவி தினகரன் கை அசைத்தபடி, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00