கழக வேட்பாளர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு - செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள், பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு

Apr 16 2019 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள், தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் காலனி, நரிமேடு சதாசிவநகர், அகிம்ஷாபுரம், மருதுபாண்டியர் நகர், பீ.பீ்குளம், செல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழக வேட்பாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். மாநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ம.ஜெயபால், கழக மகளிரணி செயலாளர் திருமதி வளர்மதிஜெபராஜ், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கூடல்நகர், ரயிலார்நகர், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழக பெண்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் வீதிவீதியாக சென்று கழக வேட்பாளருக்கு ஆதரவாக பரிசுபெட்டக சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர்.A.இளவரசனை ஆதரித்து, புவனகிரி கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் கீரை பாளையம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அகர ஆலம்பாடி, சாத்தப்பாடி, வெய்யலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து வாக்‍கு சேகரிப்பில் கழகத்தினர் ஈடுபட்டனர். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. கே.எஸ்.கே.பாலமுருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருமதி AS.பொன்னுத்தாய்க்‍கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மல்லி நாகமங்கலம், அச்சங்குளம், கம்மாபட்டி, முள்ளிக்குளம் உள்ளிட்ட கிராமங்களில், ஒன்றியக் கழகச் செயலாளர் காளிமுத்து தலைமையில் 200-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் சென்று பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திருமதி AS.பொன்னுத்தாயை ஆதரித்து, 200 மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் கிராமம் கிராமமாக சென்று, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு கழகத்தினர் வாக்‍கு சேகரித்தனர். பரிசுப்பெட்டகம் சின்னத்தை கையில் ஏந்தியும், பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. எஸ்.ஆர். செல்வம், ஈரோடு புறநகர் மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காசிபாளையம், உடையாம்பாளையம், கொடிவேரி, சிங்கிரிபாளையம், கணபதி பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் பரிசு பெட்டி சின்னத்துடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.கணபதி, வானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம், இரும்பை, கோட்டக்கரை, குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.விஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சடமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் முனைவர் ஜோதிமணி, பசுவந்தனை, சில்லாநத்தம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஒன்றிய செயலாளர் திரு. முத்துசாமி உள்ளிட்ட கழகத்தினர் உடன் சென்றனர்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு.எம். ராமசாமி, குந்தா ஓன்றியம் எடக்காடு, இந்தலார், நஞ்சநாடு, நூந்தளா உள்ளிட்ட படுகரின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பரிசு பெட்டி சின்னத்திற்கு பொது மக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது மாற்றுக்‍ கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்தனர். மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ். கலைச்செல்வன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. எம்.ராஜசேகரன், வேப்பந்தட்டை,வாலிகண்டபுரம், பிரம்மதேசம், ரஞ்சன்குடி ,வி.களத்தூர், அரும்பாவூர், பூலாம்பாடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட வாரணவாசி, சமத்துவபுரம், கீழப்பழூர், கீழகாவட்டங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, பாளையப்பாடி, செம்பியன்குடி திருமானூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், சிதம்பரம் நாடாளுமன்ற கழக வேட்பாளர் முனைவர்.ஆ. இளவரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாவட்ட கழக செயலாளர் திரு. துரை மணிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. தமிழ்மாறன், வில்லியனூர், மணவெளி தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கழக நிர்வாகிகள் பாண்டுரங்கன், எஸ்.டி.சேகர், வில்லியனூர் தொகுதி செயலாளர் நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00