நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் "பரிசுப் பெட்டகம்" சின்னத்திற்கு ஆதரவு பிரச்சாரம் : செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Apr 16 2019 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்கள், வீதி வீதியாகச் சென்று பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள், அவர்களுக்‍கு உற்சாக வரவேற்பளித்தனர்.

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. வெற்றிவேல், பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி, சர்மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று பரிசுபெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டு கழக வேட்பாளருக்கு ஆதரவாக வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. சந்தானகிருஷ்ணன், வட சென்னை தொகுதிக்குட்பட்ட ஆர்.கே. நகரில் உள்ள தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, கணக்கர் தெரு, தண்டையார்பேட்டை மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக சென்று பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்‍கு சேகரித்தார்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், கழக கூட்டணி கட்சியான SDPI கட்சியின் வேட்பாளர் திரு. தெகலான் பாகவி, நந்தனம் பகுதியில் உள்ள போக்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு. தெகலான்பாகவி, திமுக இந்தத்​தொகுதியில் இரண்டுமுறை வெற்றிபெற்றும், இங்கு குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கொண்டுவரவில்லை என குற்றம்சாட்டினார்.

தென் சென்னை நாடாளுமன்ற கழக வேட்பாளர் திரு.இசக்கி சுப்பையாவை ஆதரித்து, பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேடவாக்கம், மேடவாக்கம் கூட்ரோடு, பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரிசு பெட்டகம் சின்னத்துக்‍கு கழக நிர்வாகிகள் வாக்‍கு சேகரித்தனர். கழக வேட்பாளருக்கு பொதுமக்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற கழக வேட்பாளர் திரு. தாம்பரம் நாராயணனை ஆதரித்து, மீனம்பாக்கம், பூந்தோட்டம், காலேஜ்ரோடு, நங்கநல்லூர், பழவந்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு கழகத்தினர் பொதுமக்‍களிடம் ஆதரவு திரட்டினர். இதில், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கழக வேட்பாளர் திரு. தாம்பரம் நாராயணனை ஆதரித்து, குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காந்தி நகர், அம்பேத்கர் நகர், ராம்ஜி நகர், மரகதம் நகர், எல்லை அம்மன் தெரு போன்ற இடங்களில் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஊர்வலமாக சென்று பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.பொன் ராஜா, மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு .டி.எ. ஏழுமலை, ஆகியோர், பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன் சாவடி, அம்மா நகர், மேல் மாநகர், கீழ்மா நகர், கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக, சென்று பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்‍கு சேகரித்தனர். கழக நிர்வாகிகள், SDPI கட்சியினர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. தாம்பரம் நாராயணன், மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட, இராமாபுரம், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதியில் வீதி வீதியாக சென்று, பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, இராமபுரம் குறிஞ்சிநகர் பகுதியிலுள்ள அவரது திருஉருவ சிலைக்கு கழக வேட்பாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கழக நிர்வாகிகள், SDPI கட்சியினர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00