நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் "பரிசுப் பெட்டகம்" சின்னத்திற்கு வாக்குசேகரிப்பு : செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு

Apr 15 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள், தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.எஸ்.பரமசிவ ஐயப்பன், சாத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. எஸ்.ஜி. சுப்பிரமணியன் ஆகியோர் சிவகாசியில் பொதுமக்களிடம் பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்‍குசேகரித்தனர். கழக ஒன்றிய செயலாளர் வேண்டுராயபுரம் திரு. சுப்பிரமணியன், நகர செயலாளர்கள் திரு. பிச்சைக்கனி, திரு. சரவணகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு. அமுல்ராஜ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி. கவிதா தனசேகரன் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. செந்தமிழன் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கதிராமங்கலம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளருடன் கழக பொதுக்குழு உறுப்பினர் திரு. சேட்டு, மாவட்ட கழக இலக்கிய அணி செயலாளர் திரு. வீரமார்த்தாண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டு பகுதிகளிலும் ஈரோடு மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.கே.சி. செந்தில் குமார் பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு. எம்.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் திரு. நரேந்திரன், தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் திரு. வாரணவாசை, நகர ஒன்றிய அவைத்தலைவர் திரு. செல்லதுரை, தாராபுரம் பகுதி கழக மகளிரணி செயலாளர் திருமதி.சுதா உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் செந்தில் குமாரை ஆதரித்து வர்த்தக அணி சார்பில் தொட்டிபாளையம், நெசவாளர் காலனி, வாய்க்கால் மேடு உள்ளிட்ட பல இடங்களில் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு கழக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தனர். இதில் வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு.டி.என்.ஆனந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று வாக்‍கு சேகரித்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.ஆர்.தங்கதுரை, வத்தலகுண்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரிசுப்பெட்டகம் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் மாவட்ட அவைத் தலைவர் திரு. அண்ணாதுரை, வத்தலகுண்டு தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. கோவிந்தன் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் குறிச்சி வாய்ப்பாடி பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.எஸ்.ஆர். செல்வம் கிராம மக்களிடையே வாக்கு சேகரித்தார். அதேபோல் பவானி நகரப்பகுதி வார்டுகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பெண்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த பிரச்சாரத்தில் கழக மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் திருமதி. விசாலாட்சி, பவானி நகர கழக நிர்வாகிகள், சார்பு அமைப்பினர், மகளிர் அணியினர் என திரளானோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற கழக வேட்பாளர் திரு. தாம்பரம் நாராயணன்-ஐ ஆதரித்து காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மா.கரிகாலன் வாக்‍கு சேகரித்தார். அனகாபுத்தூர் நகர கழகச் செயலாளர் திரு. பிரகாஷ் பரிசுப்பெட்டகம் சின்னத்துக்கு அனகாபுத்தூரில் உள்ள காமராஜர் சாலை, அண்ணா நகர், பாலாஜி நகர், லேபர் பள்ளி தெரு, அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. இ. லட்சுமணன் இன்று திருவிதாங்கோடு பகுதியில் உள்ள பள்ளி வாசலில் சிறப்பு தொழுகைக்கு பின்னர் இஸ்லாமிய மக்களிடம் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்‍களிக்‍கக்‍கோரி துண்டு பிரசுரங்கள் வழங்கினார். செல்லும் இடங்களில் எல்லாம் இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கழக வேட்பாளருக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ஜெங்கின்ஸ், கிழக்கு மாவட்ட அவை தலைவர் திரு. இமாம் பாதுஷா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00