தேர்தலில் வாக்‍களிக்‍க சொந்த ஊர்களுக்‍குச் செல்ல போதிய பேருந்து வசதி செய்து தராததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்‍கள் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் : காவல்துறையினர் தடியடி - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்

Apr 19 2019 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜனநாயகக்‍ கடமை ஆற்றுவதற்காக சொந்த ஊருக்‍குச் செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதி செய்து தராததைக்‍ கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னை மாநகரில் பணி நிமித்தமாக வசிக்‍கும் மக்‍கள், வாக்‍களிப்பதற்காக சொந்த ஊருக்‍குச் செல்ல ஆர்வமாக இருந்ததாகவும், ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதுமான பேருந்து வசதி செய்யப்படாததால், நேற்று இரவு அவர்கள் பெரும் அவதிக்‍கு ஆளானார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், கோபமடைந்த மக்‍கள் சாலை மறியல் செய்துள்ளனர் - அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் போதிய பேருந்து வசதிகளை அதன்பிறகாவது செய்யத் தவறிய அதிகாரிகள், காவல்துறையை வைத்து பொதுமக்‍கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்‍கத்தக்‍கது என்று திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக்‍ கடமை ஆற்றும்படி ஒருபக்‍கம் வலியுறுத்திவிட்டு இன்னொருபுறம் அரசு காட்டும் இந்த அலட்சியம் வேதனைக்‍குரியது - தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பவாவது அவர்களுக்‍கு போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கேட்டுக்‍ கொள்வதாகவும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தமது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00