வாக்‍குகள் பதிவான மின்னணு இயந்திரங்களுக்‍கு சீல் வைப்பு : வாக்‍கு எண்ணும் மையங்களுக்‍கு கொண்டு செல்லப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Apr 19 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்​தேர்தலுக்‍கான 2-ம் கட்ட வாக்‍குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்‍கப்பட்டு வாக்‍கு எண்ணும் மையங்களுக்‍கு கொண்டு செல்லப்பட்டன.

தென்சென்னை தொகுதியில் வாக்‍குப்பதிவு நிறைவுபெற்று, மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்‍கப்பட்டன. பின்னர் அவை, வாக்‍கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்‍கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மத்திய சென்னை தொகுதியில், வாக்‍குப்பதிவு முடிவடைந்து, மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள், வாக்‍கு எண்ணும் மையமான லயோலா கல்லூரிக்‍கு கொண்டு செல்லப்பட்டன. வாக்‍கு எண்ணும் மையத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல், வடசென்னை மற்றும் பெரம்பூர் தொகுதிக்‍கான மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, இராணிமேரி அரசு கலைக்‍கல்லூரிக்‍கு கொண்டு செல்லப்பட்டன.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் முடிந்த பின்னர், மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்‍கு எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைக்‍கப்பட்டன. ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டையில் உள்ள ஆயிரத்து 660 வாக்கு மையங்களிலிருந்தும், வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்‍கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பஞ்சப்பூர் அருகேயுள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளுக்‍கான வாக்‍குப்பதிவு நிறைவுபெற்று, வாக்கு பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டன. பின்னர் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் வைக்‍கப்பட்டன. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திண்டுக்‍கல் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்‍குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் சீல்வைக்‍கப்பட்டன. பின்னர், அவை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்‍கு தேர்தல் நடைபெற்றது. ஆயிரத்து 546 வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இதேபோல், விழுப்புரம், நெல்லை, நாமக்‍கல், நாகை, உதகை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்‍கப்பட்டு, வாக்‍கு எண்ணும் மையங்களுக்‍கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையம் முழுவதையும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்‍க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00