தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் ஓராண்டு நினைவுநாள் - பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிப்பு

May 22 2019 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில், 13 அப்பாவி மக்களை பலிகொண்ட துப்பாக்கிச் சூடு கொடூரச் சம்பவத்தின் ஓராண்டு நினைவுநாள், இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பாதுகாப்புக்காக அங்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி, எடப்பாடி பழனிசாமி அரசின் காவல்துறையினர் நடத்திய கண்மூடித் தனமான துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், மத்திய-மாநில அரசுகளின் ஆதரவோடு இதனைத் திறப்பதற்கு, வேதாந்தா நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எந்த வடிவத்தில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை முறியடிப்பதில் தூத்துக்குடி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு துயர சம்பவத்தின் ஓராண்டு நினைவுநாள், இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தூத்துக்குடி நகர் முழுவதும் சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 26 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் அணையம், சி.பி.ஐ., விசாரனை ஆகியவை ஆமை வேகத்திலேயே நடைபெறுகின்றன. துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் இதுவரை அடையாளம் கண்டு தண்டிக்கப்படவில்லை. நிவாரண உதவி, துப்பாக்கி சூட்டில் காய்மடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி போன்றவை இன்னும் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக சென்றடையவில்லை. இந்த துயர சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு முடிவடையும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையினை இந்த மண்ணில் இருந்து அகற்ற நடவடிக்‍கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே, 13 பேரின் ஆன்மா சாந்தி அடையும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00