நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் : ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Jun 7 2019 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என நெல்லை ஏர்வாடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நான்குனேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது. ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். நாங்குநேரி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய தொண்டர்கள் கடுமையாக பாடு பட வேண்டும், உள்ளாட்சி தேர்தலிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடு படவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கல்லூர் திரு.இ.வேலாயுதம், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் திரு.பரமசிவஐயப்பன், நெல்லை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆவின் திரு.அண்ணச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் திரு.உக்கிரப்பாண்டியன், நெல்லை மாநகர மாவட்ட பொறியாளர் செயலாளர் திரு.ராஜா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3145.00 Rs. 3301.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.10 Rs. 41100.00
மும்பை Rs. 41.10 Rs. 41100.00
டெல்லி Rs. 41.10 Rs. 41100.00
கொல்கத்தா Rs. 41.10 Rs. 41100.00