கட்டாய கல்வி உரிமைக்‍கான நிதியை பழனிசாமி அரசு திடீரென குறைத்திருப்பதற்கு கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் - ஏழைக்‍குழந்தைகளின் கல்வியை பாதிக்‍கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தல்

Jun 11 2019 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கட்டாய கல்வி உரிமைக்‍கான நிதியை பழனிசாமி அரசு திடீரென குறைத்திருப்பதற்கு கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழைக் ‍குழந்தைகளின் கல்வியை பாதிக்‍கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் அந்தந்த பகுதிகளில் வசிக்‍கும் வசதி வாய்ப்பற்ற மாணவ, மாணவியருக்‍கு 25 சதவீத இடங்கள் இலவசமாக ஒதுக்‍கித் தரப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் - இவர்களுக்‍கான கட்டணத்தை அரசின் பள்ளிக்‍கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்‍குச் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பள்ளிக்‍கூடங்கள் திறக்‍கப்பட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே நிர்ணயிக்‍கப்பட்ட கட்டணத்திற்கான நிதியை அரசு திடீரென பாதிக்‍குமேல் குறைத்து அறிவித்திருக்‍கிறது - உதாரணத்திற்கு, முதல் வகுப்புக்‍கு முன்பு நிர்ணயிக்‍கப்பட்ட கட்டணமான 25 ஆயிரத்து 385 ரூபாய் தற்போது 11 ஆயிரத்து 719 ரூபாயாக குறைக்‍கப்பட்டிருக்‍கிறது - பழனிசாமி அரசின் இந்த நடவடிக்‍கையால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட தனியார் பள்ளிகள் மீதி கட்டணத்தைக்‍ கேட்டு பெற்றோர்களை நெருக்‍கத் தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

வசதி இல்லை என்கிற காரணத்தினால்தானே அவர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளியில் சேர்த்திருக்‍கிறார்கள் - அதனை உணராமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அரசு நடந்துகொண்டால், அவர்களால் எப்படி கட்டணத் தொகையைச் செலுத்த இயலும்? - இதனால் அந்தக்‍ குழந்தைகளின் கல்வி பாதிக்‍கப்படாதா? - கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்‍கத்தையே சிதைக்‍கும் இந்த முடிவினை, மக்‍கள் விரோத பழனிசாமி அரசு உடனடியாக கைவிட்டு, இதுதொடர்பாக பிறப்பிக்‍கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் - வசதியற்ற மாணவர்கள் கட்டணம் எதையும் செலுத்தாமல் தனியார் பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00