விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு - டவர் லைன் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

Jun 12 2019 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விவசாயிகள் டவர் லைன் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

மத்திய அரசின் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்துக்காக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நில அளவீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது நில அளவீட்டுப் பணிகளை பவர் கிரிட் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டம் செம்மாண்டம்பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பை மீறி போலீசார் துணையுடன் நில அளவீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கருமத்தம்பட்டி பகுதியில் நில அளவீடு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், நிலத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

செம்மாண்டம் பாளையம் கிராமத்தில் நில அளவீட்டுப் பணிகளுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டவர் லைன் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிகளை திரும்பப் பெறாவிட்டால், மேலிருந்து குதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00