தஞ்சாவூரில் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை

Jun 12 2019 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
தஞ்சாவூரை எழில் நகரம் ஆக்‍குவதாகக் கூறி, உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல், இரண்டாயிரம் கூலித் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசின் நடவடிக்கைக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை மக்களை வதைக்கும் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், இதனைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூரை எழில் நகரம் ஆக்‍குவதாகக் கூறி, உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல், இரண்டாயிரம் கூலித் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளும் நடவடிக்கையை‍ கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்‍கையை, எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் -

மத்திய அரசின் எழில் நகரம் திட்டத்தின் கீழ், தஞ்சாவூரில் அகழியைத் தூர்வாரி படகு போக்‍குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள் - இதற்காக அப்பகுதியில் அரை நூற்றாண்டுக்‍கு மேலாக குடியிருக்‍கும் ஏழைத் தொழிலாளர்கள் சுமார் இரண்டாயிரம் பேரின் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கான நடவடிக்‍கையை பழனிசாமி அரசு மேற்கொண்டுள்ளது - ஆனால், இவர்களுக்‍கு இன்னும் முறையான மாற்று குடியிருப்பு வசதிகளை உருவாக்‍கித் தரவில்லை - அப்படியே கொடுத்தாலும் நகருக்‍கு வெளியே 10 கிலோ மீட்டர் தூரத்தில் குடியிருக்‍க இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டிருக்‍கிறது.

அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் தஞ்சை நகரில் கூலி வேலைகளைச் செய்து வருபவர்கள் - அவர்களின் குழந்தைகளும் நகருக்குள் இருக்கும் கல்வி நிலையங்களில் படித்து வருகிறார்கள் - திடீரென வீடுகளை இடித்துத் தள்ளி, உரிய மாற்று ஏற்பாடும் செய்து தராவிட்டால், அவர்கள் எங்கே போவார்கள்? அந்தக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாதா? அகழியை அழகுப்படுத்தி படகு சவாரி நடத்துவதுதற்காக ஏழைத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு தெருவில் நிற்க வேண்டுமா? என்று, திரு. டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் இருந்தும் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு ஏழை மக்களை வதைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை நகரப்பகுதியிலேயே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு மாற்று குடியிருப்பு வசதி செய்து தந்துவிட்டு, பிறகு எழில் நகரம் திட்டத்தைச் செயல்படுத்தட்டும் எனக் கூறியுள்ள திரு. டிடிவி தினகரன், 'மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை' என்ற புரட்சித்தலைவி அம்மாவின் வைர மொழியை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையும் மீறி, ஏழைத் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை அகற்றியே தீருவோம் என்று அரசு பிடிவாதம் பிடித்தால், அதனைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் திரு. டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00