டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்‍கு தண்ணீர் திறந்துவிடாத எடப்பாடி பழனிசாமி அரசு - கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கூட்டம் நடத்துவதற்கு விவசாயிகள் கடும் கண்டனம்

Jun 12 2019 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்‍கு தண்ணீர் திறந்துவிடாத எடப்பாடி அரசு, கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கூட்டம் நடத்துவதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்‍கு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்‍கம். ஆனால் இந்த ஆண்டும், உரிய காலத்தில், கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர எடப்பாடி அரசு உரிய நடவடிக்‍கைகளை எடுக்‍கவில்லை. விவசாயிகள் வலியுறுத்தியும் நடவடிக்‍கை எடுக்‍காத எடப்பாடி பழனிசாமி, அதே தேதியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். விவசாயிகளை காப்பாற்றுவதைவிட ஆட்சியைக்‍ காப்பாற்றுவதையே, எடப்பாடி பழனிசாமி முக்‍கியமாக கருதுவதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், வணிகர்களும் மற்ற பகுதி மக்‍களும், விவசாயத்தையே முதன்மையாக நம்பியுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு பாசனக்‍ கால்வாய்கள் மற்றும் வயல்வெளிகள் அனைத்தும் வறண்டு கிடக்‍கின்றன. உரிய நேரத்தில் குறுவை சாகுபடியை தொடங்கும் வகையில், கர்நாடகத்திலிருந்து காவிரி நீரைப் பெற்றுத்தர எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை எனவும், அமைச்சர் காமராஜ் மேட்டூர் அணை திறக்‍கப்படமாட்டாது என வெளிப்படையாக தெரிவிப்பதாகவும் விவசாயிகள் கொந்தளிக்‍கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3145.00 Rs. 3301.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.10 Rs. 41100.00
மும்பை Rs. 41.10 Rs. 41100.00
டெல்லி Rs. 41.10 Rs. 41100.00
கொல்கத்தா Rs. 41.10 Rs. 41100.00