அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டத்தை புறக்‍கணித்த 2 அமைச்சர்கள் - பொதுச் செயலாளர் பதவியை குறிவைத்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் கோஷ்டியினர் போஸ்டர் யுத்தம்

Jun 12 2019 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.தி.மு.க-வில் ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ் இடையே தலைமை போட்டி உச்சக்‍கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஒட்டி​எடப்பாடியை பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது அக்‍கட்சியினர் மத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வில் ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ் இடையே தலைமை போட்டி உச்சக்‍கட்டத்தை எட்டியுள்ளது. அ.தி.மு.க-வுக்‍கு ஆளுமை மிக்‍க ஒற்றை தலைமை வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக குறிப்பிட்டு வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த செயல் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்‍கிவிட்டு, பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றவே இது போன்ற போஸ்டர்களை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளதாகவும் தொண்டர்கள் குமுறுகின்றனர். அதேவேளையில் அமைச்சர் திரு.செங்கோட்டையனையும் பொதுச்செயலாளராக குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதால் கட்சிக்‍குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு, அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஒ.எஸ். மணியன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. குன்னம் ராமசந்திரன் வரவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஒ.பி.எஸ் மீது கொண்டுள்ள அதிருப்தி காரணமாகவே அவர்கள் கூட்டத்தை புறக்‍கணித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

திரு. நரேந்திர மோடியை பிரதமராக வழிமொழிவதற்கான வாய்ப்பை அ.தி.மு.கவிற்கு வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்தல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் இக்‍கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3145.00 Rs. 3301.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.10 Rs. 41100.00
மும்பை Rs. 41.10 Rs. 41100.00
டெல்லி Rs. 41.10 Rs. 41100.00
கொல்கத்தா Rs. 41.10 Rs. 41100.00