வறட்சி ‍காலத்திற்குரிய நீர் பகிர்வு வழிமுறைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய டிடிவி தினகரன் வேண்டுகோள் - காவிரி விவகாரத்தில் பழனிசாமி அரசு தாமதமின்றி நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தல்

Jun 14 2019 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேட்டூர் அணையை ஜுன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்‍க ஏதுவாக, கர்நாடகாவிடமிருந்து காவிரி தண்ணீரை பெறுவதற்கு எந்த நடவடிக்‍கையும் எடுக்‍காத பழனிசாமி அரசுக்‍கு கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், மேட்டூர் அணையைத் திறப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெறுவதற்கு துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல் பழனிச்சாமி அரசு மௌனம் காப்பது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது மரபு - அதன்படி, இன்று அணையைத் திறப்பதற்குப் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை - தமிழகத்திற்கு 9 புள்ளி ஒன்று ஒன்பது டி.எம்.சி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும், அம்மாநிலம் வழக்கம் போலவே சண்டித்தனம் செய்வதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதனால் மேட்டூர் அணை மூலம் பாசனம் பெறும் டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தண்ணீர் இன்றி சாகுபடிப் பணிகளை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்ப்பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் - அதிலும், வீராணம் குடிநீரைப் பெறும் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன - இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல், காவிரி நீரைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பதவி நாற்காலியைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே பழனிச்சாமி கவனம் செலுத்தி வருவதாக திரு. டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

காவிரி ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமருக்கு ஒரு கடிதம் கூட பழனிசாமியின் அரசு இதுவரை எழுதியதாக தெரியவில்லை - காவிரி தண்ணீர் பெறுவது பற்றி இதுவரை ஒருவார்த்தை கூட அவர் பேசாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது - டெல்லியில் முகாமிட்ட அமைச்சர்களும் காவிரியில் தண்ணீர் கேட்டு யாரையும் வலியுறுத்தியதாக தெரியவில்லை - சுயலாபத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது -

தண்ணீர் வாங்கிக் கொடுத்து விவசாயத்தைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக வேளாண்மையை அழித்திடும் எண்ணெய்க்குழாய் - எரிவாயுக்குழாய்கள் பதித்தல், எட்டுவழிச்சாலை போடுதல், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் மக்கள்விரோத பழனிச்சாமி அரசு பன்மடங்கு வேகம் காட்டிவருவதாக திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதனால்தான் 'அணைகளில் தேக்கி வைக்க முடியாமல் நிரம்பி வழிந்து ஓடினால் மட்டுமே தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருவோம்' என்று சொல்லி மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே காவிரி பிரச்சினையைக் கர்நாடகா கொண்டு செல்ல நினைக்கிறது - இதனை மத்தியஅரசும், பழனிச்சாமி அரசும் இனிமேலும் வேடிக்கை பார்க்கக் கூடாது -

'காவிரி தண்ணீரில் தமிழ்நாட்டின் பங்கு என்பது மரபு வழிப்பட்ட உரிமை' என்ற அடிப்படையில் வறட்சிக் காலத்திற்குரிய நீர்ப்பகிர்வு வழிமுறைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய நடவடிக்கைகளை பழனிச்சாமி அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00