தஞ்சை நகரை ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு கண்டனம் - அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கம்

Jun 19 2019 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
தஞ்சை நகரை ஸ்மார்ட் சிட்டியாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சையின் பாரம்பரிய கட்டமைப்பை சிதைத்து ஸ்மார்ட் சிட்டியாக்‍கும் நடவடிக்கைக்கு அந்நகர மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்த கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இதனை ஏற்று கழக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இதற்கு அனுமதி கிடைக்காததால், தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே கழக பொருளாளர் திரு.ரெங்கசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

போராட்டத்தின்போது பேசிய கழக பொருளாளர் திரு.ரங்கசாமி, மக்‍களுக்‍காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்‍காக மக்‍களை வதைக்‍கக்‍கூடாது என தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்‍ கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்‍கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு தஞ்சை நகரை ஸ்மார்ட் சிட்டியாக்‍கும் நடவடிக்‍கையை கைவிட வலியுறுத்தினர். இக்‍கோரிக்‍கையை வலியுறுத்தி தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00