தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை - தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Jun 19 2019 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலூரில், கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. மழை நீர், வீணாக கடலில் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? நீர் வற்றுவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வால் என்ன பலன்? என்று அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

நீர் மேலாண்மை மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அரசாணைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00