திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் குடிநீர் வறட்சி : போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Jun 21 2019 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் வறட்சி காரணமாக, போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை துண்டிக்‍கும் நடவடிக்‍கையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

கோடை வெப்பத்தின் தாக்‍கத்தால், திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்‍கு கீழே சென்றுவிட்டது. இந்நிலையில், அம்மையார்குப்பத்தில் தெருக்‍குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், அனுமதியின்றி பிரதான பைப் லைன்களிலிருந்து அதிக குடிநீர் உறிஞ்சி வருவதால், முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தெருக்‍குழாய் இணைப்பு துண்டிக்கப்படாத நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00