ராஜீவ் வழக்‍கில் தண்டனைப் பெற்றுள்ள நளினிக்‍கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Jul 5 2019 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது மகளின் திருமணத்துக்காக 6 மாத காலம் பரோல் வழங்கக்கோரி, நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்டார். இந்த மனு மீதான விசாரணையில், நளினியே தனக்காக வாதாடினார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 6 மாத பரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி உத்தரவிட்டார். மேலும், நளினி தங்க உள்ள இடம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பரோல் காலத்தில் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி எதுவும் அளிக்க கூடாது, 24 மணி நேரமும் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், 30 நாட்களுக்குப் பின் சரண்டர் ஆக வேண்டும் என்றும் நளினிக்கு உத்தரவிடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00