மாநிலங்களவை தேர்தல் - திமுக சார்பில் மேலும் ஒரு வேட்புமனு : வைகோ மனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகத்தில் திமுக நடவடிக்கை

Jul 8 2019 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில், திமுக சார்பில் மேலும் ஒருவர் இன்று வேட்புமனு தாக்‍கல் செய்துள்ளார்.

மாநிலங்களவைக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தின் சார்பில் 6 உறுப்பினர்களை தேர்வு செய்யும் பட்சத்தில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 வேட்பாளர்களை அக்‍கட்சியினர் நிறுத்தியுள்ளனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, மேல்முறையீட்டுக்கு அவகாசமும் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் காரணமாக, திரு. வைகோவின் மனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், திமுக சார்பில், அக்கட்சியின் சட்ட ஆலோசகர் திரு. என்.ஆர். இளங்கோ, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒருவேளை திரு. வைகோவின் வேட்புமனு நிராகரிக்‍கப்பட்டால், மாற்று ஏற்பாடாக திமுக இந்த நடவடிக்‍கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

இதுகுறித்து திரு. வைகோ அளித்துள்ள பேட்டியில், மாநிலங்களவை தேர்தலில் தனது வேட்புமனு ஏற்றுக்‍கொள்ளப்படும் என்ற நம்பிக்‍கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது ஆலோசனையின் பேரிலேயே திமுக தலைவர் திரு. ஸ்டாலின், மாற்று ஏற்பாடாக வேட்பாளரை நிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00