வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி : தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனை - ரூ.2,09,900 பறிமுதல்- வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு
Jul 22 2019 6:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பறக்கும்படையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ராணிப்பேட்டை கே.எச்.மேம்பாலம் அருகே புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணங்களின்றி 2 லட்சத்து 9 ஆயிரத்து 900 ரூபாய் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆட்டோ மொபைல் நிறுவனர் என தெரியவந்தது. எனினும் அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து வாலாஜாபேட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.